மஸ்தி 4: திரை விமர்சனம்
கிராண்ட் மஸ்தி சீரிஸின் 4வது பாகமாக விவேக் ஒபராய், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் வெளியாகியுள்ள மஸ்தி 4 இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
லண்டனில் அருகருகே தங்கள் மனைவிகளுடன் வசிக்கும் இந்தியர்கள் விவேக் ஒபராய், ரித்தேஷ் தேஷ்முக், அப்தாப் ஷிவ்தாசனி.
Zookeeper ஆக வேலை பார்க்கும் ரித்தேஷ், மிருகங்களை போல் வேடமிட்டு ஆண், பெண் விலங்குகள் இணை சேர உதவுகிறார்; அதனை காண வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
கார் ஷோரூமில் வேலை பார்க்கும் விவேக் ஒபாராய், எந்த பெண்ணாக இருந்தாலும் ஃப்லர்ட் செய்கிறார்.

மருத்துவராக இருக்கும் அப்தாப், பரிசோதனைகளுக்கு வருபவர்களுக்கு மாட்டூசி போடும் அளவிற்கானவராக உள்ளார்.
இவர்கள் மூவரின் மனைவிகளும் தரும் சிறு சிறு தொல்லைகளால் இல்லற வாழ்வில் அவ்வளவு மகிழ்ச்சி இல்லை என்று நினைக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான் மூவரும் தங்கள் மனைவிகளை அழைத்துக்கொண்டு அர்ஷாத் வர்ஷி, நர்கீஸ் ஃபஹ்ரி தம்பதியின் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். அங்கு அர்ஷாத் மீது அவரது மனைவி பேரன்புடன் இருப்பதைப் பார்த்து திகைக்கின்றனர்.
ஆனால் அவர்களை தனிமையில் சந்தித்தபோதுதான் லவ் விசா என்பது குறித்து மூவருக்கும் தெரிய வருகிறது. அதுவே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என தெரிய, அதையே தங்கள் மனைவிகளிடமும் கூறி பின்பற்ற ஆரம்பிக்கின்றனர்.
அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை, அதை எப்படி சமாளித்தார்கள் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
கிராண்ட் மஸ்தி என்பது அடல்ட்ஸ் ஒன்லி கேட்டகிரியில் வரும் இந்தி படமாகும்.
இதன் 4வது பாகமாக இப்படத்தை மிலாப் ஜவாரி இயக்கியிருக்கிறார். முந்தைய பாகங்களைப் போல் இதிலும் கிளாமர் காட்சிகள் தூக்கல்தான்.
அதே போல் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் உள்ளன. ஆனால் காமெடிக்குதான் ஏக பஞ்சம்.
பெரும்பாலும் பார்த்து பழகிய காட்சிகள். முதல் பாதி பெரிதாக சுவாரஸ்யம் இல்லாமலே நகர்கிறது.
லவ் விசா கான்செப்ட்டை வைத்து விவேக், ரித்தேஷ், அப்தாப் ஆகியோர் காமெடி செய்கின்றனர். ஆனால் விவேக்கின் போர்ஷன் மட்டுமே சிரிக்க வைக்கிறது.
இந்த கதைக்களமே சற்று ஏடா கூடம்தான்; ஆனால் கிளைமாக்சில் திருப்தியாக முடிக்கின்றனர்.
இரண்டாம் பாதியில் வரும் மருத்துவமனை காட்சிகள் செமரகளை (அப்போது மட்டும் உணவுப்பொருட்களை கையில் வைத்திருக்க வேண்டாம்).
முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த பாகம் ரொம்பவே சுமார்தான். பல இடங்களில் சொதப்பல்.
க்ளாப்ஸ்
விவேக் ஓபராய், ரித்தேஷ் தேஷ்முக்
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
கதைக்களம்
முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள்
கிரிஞ்ச் காமெடிகள்
மொத்தத்தில் இந்த மஸ்தி (4) கொண்டாட்டம் இல்லை; திண்டாட்டம்.