மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க
தொலைக்காட்சி
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் புதிய திரைப்படங்கள் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அதுவும் நாம் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை, செம சந்தோஷம் தான்.

அப்படி, வருகிற மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்ற இரண்டு புதிய திரைப்படங்கள் விஜய் தொலைக்காட்சியில் முறையாக ஒளிபரப்பாகவுள்ளன.
மே 1 புதிய திரைப்படங்கள்
மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்த வித் லவ் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இதை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சசிகுமார் மற்றும் சைத்ரா அச்சர் இணைந்து நடித்த மை லார்ட் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இந்த இரண்டு திரைப்படங்களையும் மே 1 அன்று விஜய் டிவியில் பார்த்து மகிழுங்கள்.
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri