நிக்சன், ஐஸ்வர்யா இருவரும், சீக்ரெட்டை கூறிய மாயா- பதறி நிக்சன் சொன்ன விஷயம்
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக 75 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 100 நாட்கள் ஓடும் என்பது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான்.
வாரா வாரம் எலிமினேஷன் நடந்துவந்த நிலையில் நேற்றைய எபிசோடில் Mid Week எலிமினேஷன் நடந்தது. அதில் யாரும் எதிர்ப்பாராத விதமாக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் 75 நாட்களில் ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களை பேச கூறியுள்ளார்.
மாயா பேச்சு
அப்படி எல்லோரும் பேசி வர மாயா பேசும்போது, இதனை அடுத்து பேச வந்த மாயா, நான் ஒரு சீக்ரெட் சொல்கிறேன், ஒருநாள் நிக்சன், ஐஷு என்னிடம் வந்து பேசினார்கள் என சொல்ல முயன்றபோது இடைமறித்த நிக்சன், என் சீக்ரெட்டை நீங்க ஏன் சொல்றீங்க என்று கூற ஏங்க இப்படி பண்றீங்க என்று மாயா கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவு பெறுகிறது.
அப்படி என்ன சீக்ரெட், மாயாவை சொல்ல விட்டாரா நிக்சன் என்பதையெல்லாம் இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.