இறக்கும்போது மயில்சாமி கையில் இவ்வளவு பணம் தான் இருந்ததா.. மகன்கள் உருக்கம்

By Parthiban.A Mar 20, 2023 12:00 PM GMT
Report

மயில்சாமி

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக கெரியரை தொடங்கி அதன் பின் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் உடன் அவர் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கின்றன.

கடந்த மாதம் மயில்சாமி திடீரென மாரடைப்பு ஏற்பாடு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இறக்கும்போது மயில்சாமி கையில் இவ்வளவு பணம் தான் இருந்ததா.. மகன்கள் உருக்கம் | Mayilsamy Only Had This Money While Dying

கடைசியில் இருந்தது இவ்வளவு தான்..

மயில்சாமி தன்னுடன் உதவி என கேட்டு வருபவர்களுக்கு இல்லை என சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்திருக்கிறார். அவரது அந்த குணத்தை பற்றி பலரும் உருக்கமாக பேசி இருந்தனர்.

தற்போது மயில் சாமி கடைசியாக நடித்த கிளாஸ்மேட்ஸ் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் மயிலசாமியின் மகன்கள் கலந்துகொண்டு அவரை பற்றி உருக்கமாக பேசினார்கள்.

மேலும் மயில்சாமி இறக்கும் முன் நடித்த படத்திற்கு 30 ஆயிரம் ருபாய் சம்பளம் கிடைத்தது, அதில் 25 ஆயிரம் ருபாய் ஒருவருக்கும், 4 ஆயிரம் ருபாய் அஸிஸ்டன்டுக்கும், 1000 ரூபாய் மகன்களுக்கும் கொடுத்தாராம். அதன் பிறகு அவர் கையில் வெறும் 30 ருபாய் மட்டுமே இருந்தது என மயில்சாமியின் அசிஸ்டன்ட் கூறி இருக்கிறார். 

இறக்கும்போது மயில்சாமி கையில் இவ்வளவு பணம் தான் இருந்ததா.. மகன்கள் உருக்கம் | Mayilsamy Only Had This Money While Dying

பாக்கியலட்சுமி சீரியல் கோபியா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US