மயில்சாமி வீட்டில் மருமகள்களால் பிரச்சனையா? விவாகரத்து சர்ச்சைக்கு அவரது மகன் கொடுத்த விளக்கம்
நடிகர் மயில்சாமி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து காமெடி நடிகராக வளர்த்து எக்கச்சக்க படங்களில் நடித்தவர். அவர் 57 வயதில் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்தியது.
மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
மருமகள்களால் பிரச்சனையா?
மயில்சாமி இறந்து சில மாதங்களே ஆகும் நிலையில் அவரது வீட்டில் பெரிய பிரச்சனை நடக்கிறது என்றும் இரண்டு மருமகள்களும் விவாகரத்து கேட்கிறார்கள் என தகவல் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது பற்றி மயில்சாமி மகன் அளித்திருக்கும் பேட்டியில் இதை மறுத்து இருக்கிறார். இந்த செய்தி பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, ஏன் இவ்ளோ கேவலமா யோசிக்கிறாங்கனு தெரியல என கூறி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
