மஸகா திரை விமர்சனம்
சந்தீப் கிஷன், ரித்து வர்மா நடிப்பில் த்ரிநதா ராவ் இயக்கியுள்ள 'மஸகா' தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
குடித்துவிட்டு பீச்சில் கிடக்கும் அப்பா-மகனான ராவ் ரமேஷ், சந்தீப் கிஷன் இருவரும் கடலில் இருந்து கரை ஒதுங்கியதுபோல் கிடக்க, வாக்கிங் செல்லும் ஒருவர் அவர்கள் இறந்துகிடப்பதாக போலீஸுக்கு தகவல் கொடுக்கிறார்.
அங்கு வரும் இன்ஸ்பெக்டர் அஜய் போதையில் இருக்கும் சந்தீப் கிஷன், ராவ் ரமேஷை விசாரிக்கிறார். அப்போது பிளேஷ்பேக்கை இருவரும் கூற படம் ஆரம்பிக்கிறது. தான் பிறந்த உடனே தாயை இழக்கும் சந்தீப், தனது அப்பாவின் பாசமும் சரியாக கிடைக்காமல் வளர்கிறார்.
இருவரும் பேச்சுலர் போல வாழ்க்கையை வாழ, மகனுக்காக திருமண வரன் பார்க்கிறார் ராவ் ரமேஷ். ஆனால் பார்க்கும் இடமெல்லாம் ஒரு பெண் இல்லாத வீட்டில் எப்படி எங்கள் மகளை கட்டிக்கொடுப்பது என்று கேட்டு மறுக்கிறார்கள்.
இதனால் நாம் முதலில் திருமணம் செய்துகொண்டு பிறகு மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கும் ராவ் ரமேஷ், தன் சிறுவயது காதலி யசோதாவை சந்திக்கிறார்.
அவரை காதலிக்க தொடங்கும் அதே வேளையில், சந்தீப் கிஷன் ரித்து வர்மாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பா, மகனின் காதல் வெற்றிபெற யசோதா ரித்து வர்மாவின் அத்தை என்பது தெரிய வருகிறது.
மேலும் சந்தீப், ராவ் ரமேஷால் கனவு கான்ட்ராக்ட் மிஸ் ஆன கோபத்தில் இருக்கும் முரளி ஷர்மா, அவர்கள் தனது வீட்டுக்கே மருமகன்களாக வருகிறார்களா என்று அறிந்து ஷாக் ஆகிறார். அதன் பின்னர் சந்தீப், ரித்து வர்மா ஒன்று சேர்ந்தார்களா, அவரது அப்பாவின் காதல் என்ன ஆனது என்பதே கலாட்டாவான மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
கிருஷ்ணா எனும் கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷனும், வெங்கட ரமணாவாக ராவ் ரமேஷும் காமெடியில் அதகளம் செய்திருக்கிறார்கள். ஹீரோ சந்தீப்தான் என்றாலும் ராவ் ரமேஷ் முழு படத்தையும் தனது தோளில் தாங்குகிறார். அந்தளவுக்கு காமெடியில் அவர் ஸ்கோர் செய்கிறார்.
குறிப்பாக யசோதாவாக வரும் அன்ஷு அம்பானியை இம்ப்ரஸ் செய்ய 'இங்கிலீஸ்காரன்' சத்யராஜ் போல் யூத்தாக ட்ரெஸிங் செய்துகொண்டு, காதல் வசனங்கள் பேசும் இடமெல்லாம் அல்ட்டிமேட் காமெடி. ஆனாலும் நான்தான் உன் சிறுவயது காதலன் என்று உண்மையை கூறும் காட்சியில் எமோஷனல் ஸ்கோரும் செய்கிறார்.
முரளி ஷர்மா செய்யும் வில்லத்தனம் எல்லாம் வேற ரகம். இன்டெர்வியூக்கு வந்த நபர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததால், அவரை பழிவாங்க ரிட்டையர்மென்ட் வரை காத்திருந்து கால்களை உடைக்க ஆள் செட் பண்ணுகிறார்.
அதிலும் அவர் மிஸ்ஸாக தானே ஹாஸ்ப்பிடலில் அட்மிட் செய்யும் நிலைக்கு வந்ததை நினைத்து அவர் கொடுக்கும் ரியாக்ஷன் தியேட்டரில் சிரிப்பலை நிற்க நேரமாகிறது. வழக்கமான ஹீரோவாக வரும் சந்தீப் கிஷன் ரொமன்ஸ், சண்டை, பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
ரித்து வர்மாவுக்கு நடிக்க பெரிய வேலை இல்லை. தமாகா எனும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த த்ரிநதா ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாதி காமெடி சரவெடியாக செல்ல, பிற்பாதியில் கொஞ்சம் சென்டிமென்ட் ஒட்டிக் கொள்கிறது.
இருந்தாலும் மொத்தமாக ஜாலியான பேமிலி என்டேர்டைன்ட் ஆக படம் ஒர்க் ஆகியிருக்கிறது. ஆனால் லாஜிக் எல்லாம் கேட்கக் கூடாது பாஸ். லியோன் ஜேம்ஸின் இசை ஓகே ரகம். நிஸார் ஷாபியின் ஒளிப்பதிவு பளிச்.
க்ளாப்ஸ்
காமெடி காட்சிகள்
ராவ் ரமேஷின் அட்ராஸிட்டி
திரைக்கதை
பல்ப்ஸ்
படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்
மொத்தத்தில் வயிறு குலுங்க சிரிக்க ஒருமுறை இந்த மஸகாவை விசிட் அடிக்கலாம்.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
