கடைசி ஒரு மணி நேரம் தைரியம் இருந்தா பாருங்க - மீடியம் திரைவிமர்சனம்
உலகில் பல மொழிகளில் படங்கள் தயாராகிறது, ஒரு சில படங்கள் மட்டும் தான் நம் மனதை விட்டு பிரியாமல் இருந்து வரும்.
அந்த வகையில் தாய்லாந்த் நாட்டில் தயாரான மீடியம் என்ற படம் தான் தற்போது ஒட்டு மொத்த உலக சினிமா ரசிகர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.
பாயோன் என்ற கடவுள் ஒரு குடும்பத்தினரை தேர்ந்தெடுத்து அதில் பரம்பரை பரம்பரையாக பெண்கள் மீது வருவதாக கூறுகின்றனர்.
இதை டாக்குமண்ட்ரி செய்ய ஒரு குரூப் அங்கு செல்ல, சென்ற இடத்தில், தான் உங்களை அச்சத்தில் உறைய வைக்கும் காட்சிகள் எல்லாம் நடக்கின்றது.
பாயோன் கடவுள் இருக்கிற பெண் அவருடைய குடும்பத்தில் ஒரு பெண் மீது ஆவி இறங்குகிறது. அந்த ஆவி அவர்கள் குடும்பத்தை மட்டுமின்றி படத்தை பார்ப்பவர்கள் அனைவரையும் இதுக்கு மேல இந்த படத்த பார்க்கனுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அதிலும் கடைசி ஒரு மணி நேரம் நீங்கள் இந்த படத்தை தனியாக பார்த்தால் 1 கோடி பணம் என்று சபதமே விடலாம்.
படமே ஏதோ டாக்குமென்ரி டைப்பில் செல்வதால், நமக்கு ஏதோ நாமே படம் எடுப்பது போன்ற உணர்வை தரும்.
அதும் கடைசியில் எல்லோர் மேலும் பேய் ஏறும் காட்சி, இரத்தக்களறி தான். கேமராவை எந்த பக்கம் திரும்பினாலும் உங்களுக்கு ஒரு நொடி தூக்கிபோடும்.
கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும், இதயம் பலவீனமானவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டாம்.