தரதரவென அழைத்து செல்லப்பட்ட மீரா மிதுன் ! செய்தியாளர்களிடம் அவர் என்ன கூறினார் பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மாடல் நடிகை மீரா மிதுன் , தொடர்ந்து பலரையும் கொச்சைப்படுத்தி பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோவை பதிவிட்டு இருந்தார், இதனால் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனிடையே நேற்று கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீஸ் அதிரடியாக கைது செய்தனர். அப்போது மீரா மிதுன் கதறிய படி அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்து இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் செய்தியாளர்களிடம் "கடந்த 24 மணி நேரமாக தனக்கு சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லை என்றும் எதற்காக இப்படி செய்து வருகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும், மூன்று வருடமாக நான் அளித்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என அவர் கூறிக் கொண்டே சென்றார்.