என் கணவருக்கு நான் சடங்கு செய்ததில்... ஓபனாக பேசிய நடிகை மீனா
நடிகை மீனா
சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் மீனா.
சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியிருந்தார்.
என் ராசாவின் மனசிலே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் 90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
மீனா என்று சொன்னாலே மக்கள் அனைவருக்கும் எஜமான், முத்து, நாட்டாமை, சேதுபதி ஐபிஎஸ், அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, வானத்தை போல், ரிதம், சிட்டிசன் போன்ற படங்கள் தான் நியாபகம் வரும்.
சொந்த வாழ்க்கை
2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை மீனா திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். வித்யாசாகர் சில வருடங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரின் இறுதி சடங்குகள் மீனா தான் செய்தார், ஆனால் அப்போது அது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை மீனா, அந்த நேரத்தில் என்னை சுற்றி என்ன நடக்கிறது, யார் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை.
அதன்பின் இதுகுறித்த விவாதத்தை பார்த்தேன், அவர் என்னுடைய கணவர் அவருக்கு நான் இறுதி சடங்குகளை செய்கிறேன், இதில் யாருக்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியவில்லை.
என் மனதிற்கு சரி என்று பட்டதை நான் செய்தேன், இதை ஒரு விவாதமாக ஒரு சர்ச்சையாக ஆக்குவார்கள் என்று எனக்குத் தெரியாது. என் கணவருக்காக செய்தேன் அவ்வளவு தான் என்று நடிகை மீனா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.