ஜாதியில் என்ன பெருமை.. நடிகை மீனா காட்டமாக போட்ட பதிவு

By Parthiban A Aug 04, 2026 04:22 PM GMT
Report

80களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மீனா. அதற்குப் பிறகு 90களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜுன் என பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.

தற்போது மீனாவுக்கு 49 வயதாகிறது. அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மீனா அவரது கணவர் மறைவுக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்ய போவதாக அடிக்கடி தகவல் பரவுவதும், அது பொய் என அதற்கு பிறகு அவர் விளக்கம் கொடுப்பதும் தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது.

எதுவுமே நிரந்தரம் இல்லை

இந்நிலையில் நடிகை மீனா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

"வாழ்க்கை ஒரு நொடியில் மாறிவிடும். ஒரு போன் கால், ஒரு மெடிக்கல் ரிசல்ட், ஒரு எதிர்பார்க்காத தருணம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். எதுவுமே நிரந்தரம் இல்லை. நேரம், உடல்நிலை, நீங்கள் நேசிக்கும் நபர்கள் என எதுவுமே நிரந்தரமில்லை.

அதனால் ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழுங்கள். இன்று சாதாரணமாக இருக்கும் ஒரு விஷயம் நாளை நீங்கள் வேண்டும் என பிராத்திக்கும் ஒரு விஷயமாகவும் மாறலாம்" என மீனா கூறியிருக்கிறார்.

ஜாதியில் என்ன பெருமை.. நடிகை மீனா காட்டமாக போட்ட பதிவு | Meena Advice To People Proud Of Caste And Religion

ஜாதியில என்ன பெருமை?

மற்றொரு பதிவில் ஜாதி பெருமை பேசும் நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீனா பேசியிருக்கிறார்.

"உங்கள் ஜாதி, மதம், பிறந்த இடம், பாலினம் என அனைத்துமே பிறப்பால் வந்தது. அதை பெற நீங்கள் எதுவுமே செய்யவில்லை. அதனால் அதை நினைத்து பெருமைப்படுவதை நிறுத்துங்கள்.

உங்கள் குணம், செயல், மனித நேயம் போன்ற விஷயங்களை நினைத்து மட்டும் பெருமை கொள்ளுங்கள்" என மீனா கூறி இருக்கிறார். 

ஜாதியில் என்ன பெருமை.. நடிகை மீனா காட்டமாக போட்ட பதிவு | Meena Advice To People Proud Of Caste And Religion

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US