அழகில் அம்மாவை மிஞ்சிய நைனிகா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின் இளம் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மீனா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா எனும் அழகிய மகள் உள்ளனர்.
நைனிகா, தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தேறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அவ்வப்போது மீனாவும் அவரது மகள் நைனிகாவும் இணைந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அழகில் தாய்யை மிஞ்சிய மகள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்..
