முத்துவிற்கு புதிய கார் வாங்கி கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வரப்போவது
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் நடக்கவிருக்கும் காட்சிகள் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் அரசியல் வாதி கொடுத்த பூ மாலை ஆர்டரை செய்து முடித்து, நல்ல பெயரை வாங்கியது மட்டுமின்றி ரூ. 2.5 லட்சமும் கிடைத்தது. இதில் செலவு அனைத்தும் போக ரூ. 50,000 லாபம் கிடைக்க, இந்த காசில் தனது கணவருக்கு EMI-ல் கார் வாங்கி கொடுக்க வேண்டும் என மீனா முடிவு செய்தார்.
கார் வாங்கி கொடுத்த மீனா
அதன்படி, பூக்கட்டி சம்பாதித்த பணத்தில் தனது கணவர் முத்துவிற்கு கார் வாங்கி கொடுத்துள்ளார் மீனா. நண்பர்களுக்கு கஷ்டம் என்றதும் தனது காரை முத்து விற்பனை செய்து, அதில் வந்த பணத்தை வைத்து நண்பர்களின் கஷ்டத்தை போக்கினார்.
விஜய்க்கு மட்டும் தான் அது.. மற்ற நடிகர்களுக்கு கிடையாது.. திருமணம் ஆகாத 40 வயது நடிகை எடுத்த முடிவு
இதன்பின் காருக்கு பதிலாக ஆட்டோ ஓட்டி வந்த முத்துவிற்கு, தற்போது புதிதாக கார் ஒன்றை மீனா வாங்கி கொடுத்துள்ளார். இது முத்துவிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதோ அந்த ப்ரோமோ..