ஆரத்தி எடுத்த விஜயா... வீட்டிற்குள் மீண்டும் வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ
சிறகடிக்க ஆசை
போலி சாமியாரின் பேச்சை கேட்டு மீனாவை வீட்டிலிருந்து வெளியேற்றினார் விஜயா. இதனால் தனது அம்மாவின் வீட்டில் தங்கி வந்தார் மீனா. இதன்பின், சீதாவின் தாலியை ஒரு பெண் திருடி செல்ல, அது அந்த போலி சாமியார் என தெரியவந்தது.

அவரை பிடிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு மீனா - முத்து இருவரும் மாறுவேடத்தில் சென்று பிடித்தனர். பின்னர், அந்த திருடியை வீட்டிற்கு அழைத்து வந்து, இது ஒரிஜினல் சாமியார் இல்லை, நகை திருடி என நிரூபித்தார் முத்து.

சீதாவின் தாலியும் அவருக்கு கிடைத்தது. யார் மீனாவை வீட்டிலிருந்து வெளியேற்ற சொன்னது என அந்த திருடியிடம் விஜயா கேட்க, 'ரோகிணிதான் அப்படி செய்ய சொன்னார்' என அவர் கூறுகிறார்.
ஆரத்தி எடுத்த விஜயா
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதில், போலி சாமியார் கையும் களவுமாக சிக்கிவிட்ட காரணத்தினால், முத்து போட்ட சவாலில் வெற்றிபெற்றுவிட்டார். இதனால் மீனா மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டார். ஆனால், சாதாரணமாக வரவில்லை விஜயாவே மீனாவிற்கு ஆரத்தி எடுத்து, 'மருமகளே வா' என கூறியிருக்கிறார்.
You May Like This Video