நடிகர் திலகம் சிவாஜியுடன் சிறு வயதில் நடிகை மீனா எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க
மீனா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தார். தென்னிந்திய அளவில் பிரபலமான இவர் சமீபகாலாமாக தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வருகிறார். அதுவும் ஒரு சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை நடிகை மீனா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா எனும் ஒரு மகள் உள்ளார். மீனாவை தொடர்ந்து அவருடைய மகள் நைனிகாவும் நடிக்க வந்துவிட்டார்.
விஜய்யின் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா பின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் மரணமடைந்தார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் பராசத்தி படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்த நிலையில், நடிகை மீனா நேற்று சிவாஜியின் நினைவு நாள் என்பதால் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் சிறு வயதில் சிவாஜியுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
