வளைகாப்புக்கு கிளம்பும் மீனா.. வில்லன் அப்பா செய்த அதிர்ச்சி காரியம்! பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சி காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடின் தொடக்கத்திலேயே முல்லையின் அம்மா தனத்தை பார்த்து கூறும் விஷயம் முல்லைக்கே கோபத்தை வர வைக்கிறது.
தனம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு தான் அடுத்து வளைகாப்பு என யாரோ ஒரு உறவினர் கூற, 'அதான் முதல் குழந்தைக்கு வளைகாப்பு செஞ்சாச்சே, மறுபடியும் எதுக்கு' என கூறுகிறார் முல்லையின் அம்மா. அதை கேட்டு அவர் முகம் வாடிவிடுகிறது, இருப்பினும் கோபப்படவில்லை.
கண்ணனிடம் பேசாத மூர்த்தி
அதற்கு பிறகு கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் வருகின்றனர். அவர்களிடம் மூர்த்தி பேசாமல் சென்றுவிடுகிறார். ஆனால் கண்ணன் அவரை பார்த்து கொண்டே இருக்க, 'பேசலனா விடு.. நீயா போய் மறுபடி மறுபடி கேட்டுட்டு இருக்காத' என ஐஸ்வர்யா கண்ணனை கண்டிக்கிறார்.
ஒரு தம்பியை மட்டும் காணவில்லையே என வந்தவர்கள் மூர்த்தியை கேட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். அவர்களை எதோ சொல்லி சமாளிக்கிறார் கதிர்.
மீனாவின் அப்பா செய்த விஷயம்
ஜீவா மற்றும் மீனா இருவரும் முல்லை வளைகாப்புக்கு செல்ல கிளம்புகிறார்கள். அந்த நேரத்தில் மீனாவின் அப்பா தனக்கு உடல்நிலை சரியில்லை என சொல்கிறார். இரவு முழுவதும் தூங்கவில்லை எனவும் கூறுகிறார்.
மீனா கிளம்பும்போது வில்லன் அப்பா தனக்கு நெஞ்சு வலிக்கிறது என சொல்லி கதற, அவரை எல்லோரும் சேர்ந்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள். ஜீவா-மீனா இருவரையும் வளைகாப்புக்கு போகவிடாமல் தடுக்க தான் அவர் இப்படி செய்கிறாரோ?
அது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.
லொள்ளு சபா ஜீவாவுக்கு இத்தனை கோடியில் வீடா? வாய்பிளக்கும் ரசிகர்கள்