ஹிந்தியில் பேசணுமா.. என்னை எதுக்கு கூப்டீங்க! -விருது விழாவில் டென்ஷன் ஆன நடிகை மீனா
நடிகை மீனா தமிழில் முன்னணி ஹீரோயினாக 80கள் மற்றும் 90களில் இருந்தவர். அவர் தற்போது குணச்சித்திர வேடங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தான் கலந்துகொண்டு வருகிறார்.
அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய் உடன் தெறி படத்தில் நடித்தார். அதற்கு பிறகு மகளை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த சொல்லி இருக்கிறார் மீனா.
விருது விழாவில் கோபம்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த IIFA விருது விழாவுக்கு மீனாவை அழைத்து இருக்கின்றனர். அவரும் சென்று இருக்கிறார். அந்த விழாவுக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்டப் பல மொழி நட்சத்திரங்கள் வருவார்கள்.
மீனா சென்ற போது அங்கிருந்த மீடியா மைக்குகள் முன்பு பேச ஆரம்பிக்கும் போது அவரை தமிழில் பேச வேண்டாம் ஹிந்தியில் பேசுங்க என கூறுகின்றனர்.
"ஹிந்தி என்றால் என்னை எதற்கு கூப்டீங்க. தென்னிந்தியா மட்டும் வருகிறார்கள் என நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமை படுகிறேன்" என அங்கு பேசி இருக்கிறார் மீனா.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
