நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் திடீர் மரணம் ! என்ன காரணம் தெரியுமா?
மீனாவின் கணவர் மரணத்தின் பின்னணி
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா, இவருக்கு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார், இதனிடையே 48 வயதான மீனா கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவு காரணமாக நேற்று திடீரென சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அவரின் மறைவு குறித்த சில காரணங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமடைந்துள்ளது.
இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகரின் நுரையிரல் மற்றும் இதயம் செயலிலந்துள்ளது. மேலும் அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய உடல் உறுப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் அவர் ECMO கருவியின் முலம் உயிர் வாழ்ந்து வந்துள்ளார். பின் வித்யசாகரின் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் செயலிழந்துள்ளது. இதன் காரணமாக வித்யசாகர் நேற்று மாலை காலமாகியுள்ளார். மேலும் உடலை சென்னை பெசன்ட் நகரில் தகனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீனாவின் கணவருக்கு இப்படியொரு நோயா? இதனால் தான் இறந்தாரா?- வெளிவந்த விவரம்