வீட்டை விட்டு வெளியேறும் மீனா.. காரணம் என்ன? சிறகடிக்க ஆசை புரோமோ வீடியோ
மக்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை.
ரோகிணி - மீனா
ரோகிணிக்கு இதற்கு முன் திருமணமாகி முதல் கணவர் இறந்துவிட்டார் மற்றும் அவருடைய மகன்தான் கிரிஷ் என்கிற உண்மை மீனாவிற்கு தெரியவந்துவிட்டது. ஆனால், இந்த உண்மையை குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொன்னால், மகனுடன் சேர்ந்து நானும் தற்கொலை செய்துகொள்வேன் என ரோகிணி கெஞ்சி கேட்டதால், உண்மையை மறைத்துக்கொண்டு இருக்கிறார் மீனா.

சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ
உண்மையை மறைக்கிறோம் என்பதால் மீனாவின் முகமே முன்பு போல் இல்லை. ஊரில் இருந்து வந்த பிறகுதான் இப்படி இருக்கிறார் என முத்து சந்தேகப்படுகிறார். மனநலம் பாதிக்கப்பட்டு, சாமியார் வேடத்தில் வந்த ஒருவர் சொன்ன சொல் தான் மீனாவின் சோகத்திற்கு காரணம் என முத்து நினைக்கிறார்.

புரோமோ வீடியோ
இந்த நிலையில், அடுத்த வாரத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் முத்து மற்றும் மீனாவிற்கு இடையே திடீரென சண்டை வருகிறது. இதனை தொடர்ந்து மீனா தனது அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறுகிறார்.

முத்துவுக்கும் உனக்கும் பிரச்சனையா என அண்ணாமலை கேட்க ரோகிணியை பார்த்துக்கொண்டு நிற்கிறார் மீனா. உண்மையை அனைவரிடமும் மீனா கூறுவாரா? என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri