Chubbyயாக சிறுவயதில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா.. அட இவங்கதானா
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவயது நாயகி எவ்வளவு கியூட்டாக உள்ளார்.
சிறுவயதில் இருந்தே நடிக்க தொடங்கியவர் இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியில் நடித்துள்ளார்.
48 வயதாகும் இவர் பரதநாட்டிய கலைஞராவார். சினிமாவில் வெற்றிக்கண்ட இவரது வாழ்க்கையில் கடந்த 2022ம் ஆண்டு ஒரு துயரமான சம்பவம் நடந்தது, ஆனால் நடிகை இப்போது அதில் இருந்து மீண்டுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை நடிகை மீனா தான். முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் இப்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணத்திற்காக ஜப்பான் சென்றவர் அங்கு எடுத்த நிறைய வீடியோக்கள், புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.
விஜய்யின் தெறி, பாஸ்கர் த ராஸ்கல் என சில படங்களில் நடித்த மீனாவின் மகள் நைனிகா தற்போது தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.