சிந்தாமணியின் மகள்தான் ரேகா என தெரிந்து அதிர்ச்சியடைந்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல்

By Kathick Apr 16, 2026 03:45 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிந்தாமணியை எதிர்த்து பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் மீனா. ஏற்கனவே மீனாவுக்கும் சிந்தாமணிக்கும் ஆகாது. இதில் மீனா தன்னை தோற்கடித்துவிட்டார் என்பதால் கடும் கோபத்தில் சிந்தாமணி இருக்கிறார்.

சிந்தாமணியின் மகள்தான் ரேகா என தெரிந்து அதிர்ச்சியடைந்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் | Meena Shocked Know That Rekha Sinthamani Daughter

மீனா தேர்தலில் வெற்றிபெற கூடாது என்பதற்காக ரவுடியை வைத்து மீனாவை கத்தியால் குத்த வைத்தார். இப்படி சிந்தாமணி பல தடைகளை கொடுத்தும் மீண்டும் அதை தாண்டி மாபெரும் வெற்றிபெற்றார்.

தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி வெங்கடாசலம்.... குவியும் லைக்ஸ்

தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி வெங்கடாசலம்.... குவியும் லைக்ஸ்

அதிர்ச்சியில் மீனா

மீனாவை தனது எதிரியாக சிந்தாமணி பார்க்கிறார். ஆனால் மறுபக்கம் மீனாவின் தம்பி சத்யாவை சிந்தாமணியின் மகள் ரேகா காதலித்து வருகிறார். இன்றைய எபிசோடில், தான் சிந்தாமணியின் மகள் என்பதை சத்யாவிடம் ரேகா கூறிவிட்டார். இதை கேட்டவுடன் அதிர்ச்சியடையும் சத்யா, "நாம் ஒன்று சேர முடியாது, உங்க அம்மா எங்க குடும்பத்தையே அழிக்க முயற்சி செய்கிறார்" என சத்யா கூறுகிறார்.

சிந்தாமணியின் மகள்தான் ரேகா என தெரிந்து அதிர்ச்சியடைந்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் | Meena Shocked Know That Rekha Sinthamani Daughter

இதன்பின், இந்த விஷயத்தை முத்து - மீனாவிடம் கூறலாம் என ரேகாவும் சத்யாவும் முடிவு செய்கின்றனர். அதன்படி, முத்து - மீனாவை வரவழைத்து அவர்களிடம் தங்களுடைய காதலை பற்றியும், சிந்தாமணியின் மகள்தான் ரேகா என்பதையும் பற்றி கூறுகிறார்கள். இதை கேட்டவுடன் "நீங்கள் இருவரும் பிரிந்துவிடுங்கள்" என மீனா கூறுகிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US