தனியா இருந்தாலே அந்த பிரச்சனை இருக்கும்.. 2ம் திருமணம் குறித்து பேசிய மீனா
மீனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த மீனா, 2009 -ம் ஆண்டு வித்யாசகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த வித்யாசாகர், கடந்த 2022 -ம் ஆண்டு காலமானார். கணவரை இழந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா, சமீபகாலமாக நடிப்பிலும் கவனம் செலுத்து வருகிறார்.
2ம் திருமணம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனாவிடம் இரண்டாம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மீனா, "கணவர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது மறைவை என்னால் ஈடு செய்ய முடியவில்லை. ஒரு ஹீரோயின் தனியாக இருந்தாலே பல வதந்திகள் தொடர்ந்து வரும்".
"அந்த மாதிரியான வதந்திகள் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதித்தது. தற்போது வரை மறுமணம் குறித்து யோசிக்கவில்லை. எனக்கு மகள் இருக்கும் சூழலில் மறுமணம் என்பது அவரையும் சார்ந்தது தான்" என்று மீனா கூறியுள்ளார்.

சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri
