கோட் பட நடிகை மீனாட்சி சவுத்ரியின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
GOAT
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்காக விஜய் ரூ. 200 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க விஜய்யை தாண்டி பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், மகன் ரோலில் நடித்த விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சௌத்ரி படத்தில் சில சீன் மட்டுமே நடித்திருப்பார்.
வைரல் புகைப்படம்
கோட் படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் உடன் இணைந்து லக்கி பாஸ்கர் எனும் படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இந்த நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரியின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..