என்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என கிண்டல் செய்தார்கள், ஆனால்... இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி
மீனாட்சி சவுத்ரி
ஆர்.ஜே.பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன், விஜய்யுடன் தி கோட் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை மீனாட்சி சவுத்ரி.
தமிழ் மட்டுமில்லை தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகிலும் படங்கள் நடித்து கலக்கி வருகிறார். அதோடு வெப் தொடர்களிலும் நடிக்கிறார், ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வருகிறார்.

கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
நடிகை பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் தன்னைப்பார்த்து வந்த மோசமான விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தான் நான் பிறந்து வளர்ந்தேன்.
கிராமத்தில் எனது நிறம் மற்றும் அழகு குறித்து விமர்சனம் செய்வது மட்டுமின்றி உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என நிறைய கிண்டல் செய்து வந்தனர், நிறைய விமர்சனங்கள் காயப்படுத்தியுள்ளன.

விமர்சனங்களை சாதனையாக மாற்ற டாக்டராக விரும்பினேன், அழனை நிரூபிக்க மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். ஜெயித்த பிறகு கிராமத்திற்கு போனேன், பழங்கால மக்கள் வாழும் கிராமம் என்பதால் முதலில் என்னை விமர்சித்தார்கள், மோசமான தொழில் என்றார்கள்.

பிகினி அணிவது ஏற்றுக்கொள்ள முடியாது என எல்லோரும் என்னை எதிர்த்தார்கள். ஆனால் இப்போது என்னால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது என்னை மிகவும் மதித்து வரவேற்கிறார்கள் என்றார்.