விஜய்யின் கோட் படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது.. மீனாட்சி சௌத்ரி ஷாக்கிங் பதில்
கோட் படம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்த படம் கோட்.
விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், லைலா, அஜ்மல், பிரபுதேவா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படம் வெளியாக சரியான விமர்சனத்தை பெறவில்லை, எனவே வசூலிலும் கொஞ்சம் சொதப்பியது.
நடிகை பேட்டி
விஜய் கோட் படத்தில் நாயகியாக நடித்த மீனாட்சி சௌத்ரி ஒரு பேட்டியில், தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கேட்டால் கோட் படத்தில் நடித்தது தான், இப்படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.
படத்தில் என்னுடைய காட்சிகள் மிகவும் குறைவு, ஒரு பாடலுக்கு மட்டுமே என்னை பயன்படுத்தினார்கள்.
படத்திற்கு எனது கதாபாத்திரம் தேவையே இல்லை என விமர்சனம் செய்து என்னை மையப்படுத்தி பல ட்ரோல் வெளியானது. அதெல்லாம் பார்க்கும் போது மன அழுத்தத்திற்கு ஆளானதாக மீனாட்சி பேட்டி கொடுத்துள்ளார்.