விஜய் பட நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு அடித்த ஜாக்பாட்!.. என்ன தெரியுமா?
மீனாட்சி சவுத்ரி
மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
என்ன தெரியுமா?
இந்நிலையில், நடிகை மீனாட்சி பாலிவுட் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது போர்ஸ் படத்தின் 3-வது பாகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது போர்ஸ் படத்தின் 3-வது பாகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
போர்ஸ் 3 படத்தை இயக்க பாவ் துலியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.