கதாநாயகியா!! கனவில் கூட நினைக்கவில்லை.. போட்டுடைத்த GOAT பட நாயகி
மீனாட்சி சவுத்ரி
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் நடிகர் துல்கர் சல்மானின் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மீனாட்சி சவுத்ரி பேட்டி
இந்நிலையில், பேட்டி ஒன்றில் மீனாட்சி சினிமாவிற்கு வருகை தந்தது பற்றி பகிர்ந்துள்ளார், அதில், என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி என்பதால் சிறு வயது முதல் கட்டுப்பாடுடன் வளர்ந்தேன்.
பள்ளி மற்றும் கல்லூரி காலகட்டத்தில் இருந்தே நான் விளையாட்டில் பங்குபெற வேண்டும் என என் அப்பா ஆர்வம் காட்டினார். அவருக்கு நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் என்று முயன்றார். ஆனால் நான் கதாநாயகி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
