ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்கள் நடிக்கும் நடிகை ஷோபனா- இன்னொரு புதிய தொடரின் புரொமோ இதோ
பூங்காற்று திரும்புமா
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவடைந்த தொடர் என்றால் அது பனிவிழும் மலர்வனம் தொடர் தான்.
இந்த தொடர் ஆரம்பித்த வேகத்தில் முடிவடைந்துவிட்டது, இதனால் உடனே விஜய் தொலைக்காட்சி புதிய தொடரின் புரொமோவை வெளியிட்டார்கள். முத்தழகு சீரியல் புகழ் ஷோபனா நாயகியாக நடிக்கும் இந்த தொடரின் பெயர் பூங்காற்று திரும்புமா.
சமீபத்தில் தான் தொடரின் புரொமோ வெளியானது, ஆனால் இதுபோன்ற கதை வேண்டாம் என சில ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதிய தொடர்
இந்த தொடரை தொடர்ந்து 2வது ஒரு சீரியலிலும் நடிகை ஷோபனா ஒரே நேரத்தில் நடித்து வருவது தெரிய வந்துள்ளது. அவர் விஜய் டிவியை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியிலும் ஒரு சீரியல் நடித்துள்ளார்.
மீனாட்சி சுந்தரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.