காதலில் விழுந்தாரா நடிகை மீனாட்சி சவுத்ரி.. காதலர் யார் தெரியுமா? இவரா!
மீனாட்சி சவுத்ரி
மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
இந்நிலையில், மீனாட்சி சவுத்ரி காதலில் இருப்பதாக இணையத்தில் தகவல் வந்த வண்ணம் உள்ளது.
இச்சா வாகனமுலு துலாராடு என்ற படத்தில் மீனாட்சி சவுத்ரியும் சுஷாந்தும் ஒன்றாக நடித்திருந்தனர். படப்பிடிப்பின் போது இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், தற்போது இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
யார் தெரியுமா?
இந்நிலையில், இருவரும் சமீபத்தில் விமான நிலையத்தில் ஒன்றாக காணப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில் மீனாட்சி சவுத்ரி முகத்தை மூடியபடி சுஷாந்த் டிராலியை தள்ளியபடியும் சென்றுள்ளனர். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவ ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.