நடிகை ஷோபனா நடிக்கும் மீனாட்சி சுந்தரம் சீரியல் எப்போது ஆரம்பம்... வெளிவந்த விவரம்
நடிகை ஷோபனா
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர்களில் ஒன்று முத்தழகு. இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷோபனா.
முத்தழகு என்ற தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வர இப்போது ஷோபனா தனது அடுத்தடுத்த சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
எல்லோரும் ஒரு நேரத்தில் ஒரு சீரியல் கமிட்டாகி நடிக்க இவர் 2 தொடர்கள் கமிட்டாகியுள்ளார்.
புதிய தொடர்
விஜய் டிவியில் பூங்காற்று திரும்புமா என்ற தொடரில் நடிக்கிறார் ஷோபனா. இந்த தொடரை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடிக்கிறார்.
எஸ்.வி.சேகருடன் இணைந்து இந்த தொடரில் நடிக்கிறார் ஷோபனா.‘
தற்போது இந்த தொடர் வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.