மீரா மிதுனின் நண்பரையும் கைது செய்தது போலீஸ் !
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மாடல் நடிகை மீரா மிதுன் , தொடர்ந்து பலரையும் கொச்சைப்படுத்தி பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோவை பதிவிட்டு இருந்தார், இதனால் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனிடையே நேற்று கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீஸ் அதிரடியாக கைது செய்தனர். அப்போது மீரா மிதுன் கதறிய படி அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீரா மிதுனின் நண்பரான அபிஷேக் ஷியாமையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளனர்.
மேலும் மீரா மிதுனின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த புகாரில் நண்பர் அபிஷேக் ஷியாம் கைதாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.