விசாரணையின் போது மாற்றி மாற்றி பேசும் மீரா மிதுன், என்ன கூறியுள்ளார் பாருங்க
மாடல் நடிகையான மீரா மிதுன் பலரையும் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுயிருந்தார். இதனால் அவர் மீது பலரும் போலீஸில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் சில தினங்களுக்கு முன் அதிரடியாக கைது செய்யப்பட்டார், தற்போது அவர் சென்னை அழைத்து வரப்பட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது போலீஸ் விசாரணையின்போது மீரா மிதுன் சொன்னதையே திரும்பச் சொல்வது, கேட்கும் கேள்வி ஒன்றாகவும் அவர் சொல்லும் பதில் ஒன்றாகவும் இருப்பது, உள்ளிட்ட பலதரப்பட்ட முன்னுக்குப் பின் முரணான பதில்கள் அவரிடம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் இதனால் அவரை மனநல மருத்துவரின் உதவியுடன் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
