அன்பே ஆருயிரே பட நடிகையை நினைவு இருக்கா! 40 வயதில் காதலனை திருமணம் செய்யும் நடிகை மீரா சோப்ரா..
மீரா சோப்ரா
அன்பே ஆருயிரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்து வந்தார்.
40 வயது ஆகும் நடிகை மீரா சோப்ரா, திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளிவந்தது. நடிகர், நடிகைகளுக்கு திருமணம் என கூறி, பல வதந்திகள் அவ்வப்போது வெளியாகும் என்பதால், நடிகை மீரா சோப்ராவிடமே இது குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் கேட்கப்பட்டது.
40 வயதில் திருமணம்
இதற்கு பதிலளித்த , 'ஆம் எனக்கு திருமணம் ஆகப்போகிறது. என் திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி உண்மை தான். மார்ச் மாதம் எனக்கு திருமணம் நடக்கிறது' என கூறியிருந்தார்.
இந்நிலையில், 40 வயதாகும் நடிகை மீரா சோப்ரா தனது காதலனை கரம்பிடிக்கவுள்ளார் என தெரிய வந்துள்ளது. மீராவின் திருமணத்திற்கான ஏற்பாடு தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறதாம். ஆனால், இதுவரை மீராவை மணந்துகொள்ள போகும் அவருடன் காதலன் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.