எஸ்.ஜே. சூர்யா பட நடிகைக்கு 40 வயதில் திருமணம் முடிந்தது.. காதல் தம்பதியின் புகைப்படம்
மீரா சோப்ரா
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா சோப்ரா.
இவருக்கு திருமணம் என கடந்த மாதம் தகவல் வெளிவந்த நிலையில், அதே நடிகை மீரா சோப்ரா உறுதி செய்தார். இந்த நிலையில் தற்போது மீரா சோப்ராவின் திருமணம் பிராம்மண்ட முறையில் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
திருமணம்
கடந்த மூன்று ஆண்டுகளாக ரக்ஷித் என்பவரை நடிகை மீரா சோப்ரா காதலித்து வந்துள்ளார். 40 வயதாகும் நடிகை மீரா சோப்ரா, மூன்று ஆண்டுகள் காதலுக்கு பின் தனது காதலர் ரக்ஷித் என்பவரை நேற்று கரம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், தன்னுடைய திருமண புகைப்படங்களை நடிகை மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் "இனிமேல் மகிழ்ச்சி, சண்டை, சிரிப்பு, கண்ணீர் மற்றும் நினைவுகள் தன்னுடைய வாழ்க்கையில் அதிகமாக இருக்கும்" என தனது திருமணம் குறித்து மகிழ்ச்சியுடன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
இதோ திருமண புகைப்படங்கள்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/bc923496-b784-4808-9e6f-8471aaa13a18/24-65f125b43542b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5d71e4f3-21a7-41e0-88a4-ba1cd682d8a4/24-65f125b4c0430.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1d48ab2a-8099-4a80-a54f-fa815996afb1/24-65f125b5531b1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/9c506ed2-18ac-48e1-9415-18fca03a8f69/24-65f125b5dddd3.webp)