தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக்கிற்கு அம்மாவாக நடிப்பவரின் வயது இவ்வளவு தானா.. தீபக்கை விட குறைந்த வயதாம்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக துவங்கப்பட்ட சீரியல் தான், தமிழும் சரஸ்வதியும்.
இதில் கதாநாயகனாக தீபக் நடிக்க, நட்சத்திரா நாகேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக்கின் அம்மாவாக கோதை கதாபாத்திரத்தில், நடிகை மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலை தவிர்த்து, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலிலும் நடிகை மீரா கிருஷ்ணன் நடிக்கிறார்.
இந்நிலையில், கோதை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மீரா கிருஷ்ணனின் வயது 36 தானாம்.
இருப்பினும் 41 வயதாகும் நடிகர் தீபக்கிற்கு அம்மாவாக நடித்து வருகிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.