நடிகை மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் முக்கிய நபர் மரணம்.. சோகத்தில் குடும்பம்

Kathick
in பிரபலங்கள்Report this article
மீரா ஜாஸ்மின்
தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீரா ஜாஸ்மின். தமிழில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் விஜய்யுடன் புதிய கீதை, விஷாலுடன் சண்டைக்கோழி, மாதவனுடன் ஆயுத எழுத்து என தொடர்ந்து பிசியாக நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பிசியான நடிகையாக இருந்து வந்த மீரா ஜாஸ்மினுக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
அணில் ஜான் என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட மீரா ஜாஸ்மின், திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இதன்பின் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது தமிழில் டெஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தந்தை மரணம்
இந்த நிலையில், நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை மரணமடைந்துள்ளார். இந்த துயர சம்பவம் குறித்து மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த தகவலை திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த வகையில் தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
