சண்டக்கோழி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த இவர் தான்.. மீரா ஜாஸ்மின் கிடையாதாம்
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த படம் சண்டக்கோழி.
இப்படத்தில் விஷலுடன் இணைந்து மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர்.
செம மாசான கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்திருந்தது.
இந்நிலையில், சண்டக்கோழி முதல் பாகத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது மீரா ஜாஸ்மின் இல்லையாம்.
சண்டக்கோழி படத்தின் கதையை முதன் முதலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்குக் தான் இயக்குனர் லிங்கு சாமி சொன்னாராம்.
ஆனால், அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு ஷாக்கான படக்குழு இப்படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவெத்ததாக தகவல் கூறுகின்றனர்.