ஷூட்டிங்கில் இருந்து ஓடிய மீரா மிதுன்.. நடிகர் சங்கத்தில் புகார்

Meera Mithun
By Parthiban.A Dec 14, 2021 02:50 PM GMT
Report

நடிகை மீரா மிதுன் பல சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். அழகி பட்டம் பறிக்கப்பட்ட சர்ச்சை தொடங்கி பிக் பாஸ் வீட்டில் செய்த பிரச்சனை, சமூக வலைதள பேச்சால் கைதானது என மீரா மிதுனை பற்றி பல்வேறு சர்ச்சைகள் நாம் பார்த்திருக்கிறோம்.

சிறையில் இருந்த அவர் ஜாமீன் பெற்று வெளியில் வந்திருக்கிறார். அதன் பிறகு அவர் 'பேய காணோம்' என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்து வந்தது. ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங்கில் இருந்து மீரா மிதுன் திடீரென காணாமல் போய்விட்டாராம்.

அவரை தேடி தான் தற்போது குழுவினர் அலைகிறார்களாம். மொத்த குழுவினரும் ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருக்கும் வேளையில் மீரா மிதுன் தனது உதவியாளர்களை கூட்டிக்கொண்டு காணாமல் போய்விட்டாராம்.

ஷூட்டிங் முடிய இன்னும் இரண்டு தினங்கள் இருக்கும்போது பேயாக நடித்த மீரா மீதுன் மற்றும் அவரதுஉதவியாளர்கள் 6 பேரும் காணாமல் போய்விட்டனர். எங்கள் உழைப்பை சுத்தமாக மதிக்காமல் மீரா மிதுன் இப்படி செய்திருப்பது பற்றி நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க இருக்கிறோம் என தெரிவித்து உள்ளனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US