மீரா மிதுனுக்கு மீண்டும் ஜாமீன்! ஆனால் ஒரு கண்டிஷன்..
நடிகை மீரா மிதுன் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் லைவ் வீடியோவில் பேசும்போது பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூராக பேசியதாக புகார் எழுந்தது. அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை சினிமாவில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என அவர் கூறினார்.
இரண்டாவது முறையாக கைது
அவர் பேசியது சர்ச்சையான நிலையில் போலீசார் அவரை வலைவீசி தேடி பிடித்தனர். அவரது காதலரும் கைது செய்யப்பட்டார். அதன் பின் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார் மீரா மிதுன். அதன் பிறகு நடந்த வழக்கு விசாரணையில் மீரா மிதுன் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதனால் குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனை இரண்டாவது முறையாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில் தற்போது மீரா மிதுன் மீண்டும் தனக்கு ஜாமீன் வேண்டும் என விண்ணப்பித்து இருந்தார். விசாரித்த நீதிபதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறார்.
வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளி அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
