மீரா மிதுன் இந்த ஊரில தான் பதுங்கி இருக்கிறார்! கண்டுபிடித்த போலீஸ்.. விரைவில் கைது
மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் பற்றி சர்ச்சையாக பேசி கைதாகி சிறைக்கு சென்றவர். அவர் மீது வழக்கு பதிவு செய்த உடனேயே அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர்.
அதன் பின் வழக்கில் ஜாமீன் பெற்று மீரா மிதுனம் அவரது ஆண் நண்பரும் வெளியில் வந்தனர். அதற்கு பிறகு கோர்ட் விசாரணைக்காக மீரா மிதுன் நேரில் ஆஜராகவில்லை என்பதால் அவரை பிடிக்க நீதிமன்றம் இரண்டு முறை பிடிவாரண்ட் பிறப்பித்தது.
பெங்களூரில் தலைமறைவு
மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார், அவரை தேடிக்கொண்டிருக்கிறோம் என போலீசார் அதன் பின் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை மீண்டும் வந்தபோது மீராவை போலீசார் ஆஜர்படுத்தவில்லை. அவர் பெங்களூரில் பதுங்கி இருக்கிறார் என கண்டறிந்து இருக்கிறோம், விரைவில் கைது செய்து ஆஜர்படுத்துகிறோம் என போலீசார் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.
ரவீந்தருக்கு இதனால் தான் விவாகரத்து ஆனதா? இந்த பிக் பாஸ் நடிகரின் படம் தான் காரணம்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
