தலைமறைவான மீரா மிதுன்! வலைவீசி தேடும் போலீசார்.. மீண்டும் கைதாகிறார்!
மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் பற்றி தவறாக பேசிய குற்றச்சாட்டுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் ஜாமினில் வெளியே சென்ற நிலையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அதனால் அவரை மீண்டும் கைது செய்து ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அப்போதும் போலீஸ் அவரை ஆஜர்படுத்தவில்லை. இரண்டாவது முறையாக நீதிமன்றம் மீராவுக்கு ஜாமினில் வர முடியாத வாரண்ட் பிறப்பித்தது.
தலைமறைவு
இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மீரா மிதுன் வரவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என போலீசார் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
வழக்கை செப்டம்பர் 14ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்து இருக்கிறது. அதற்குள் மீரா மிதுன் எங்கே இருக்கிறார் என்பதை போலீசார் ட்ரேஸ் செய்து கைது செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.