மேகா ஆகாஷா இது? மிக மோசமாக புகைபிடிக்கும் காட்சி வைரல்
தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனவர் மேகா ஆகாஷ் அவர். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் தற்சமயம் கைவசம் 3 படங்கள் வைத்து இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது சொந்த தயாரிப்பில் நடிக்கிறார் மேகா ஆகாஷ் எங்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. அவரது அம்மா பிந்து ஆகாஷ் தயாரிப்பில் மேகா நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. காதலர் தின வாழ்த்து சொல்ல வெளியிடப்பட்ட போஸ்டரில் மேகா புகைபிடித்து கொண்டிருக்கிறார், அதை பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
டியர் மேகா படத்தின் இயக்குனர் சுஷாந்த் ரெட்டியின் அசிஸ்டன்ட் அபிமன்யு பட்டி தான் இந்த படத்தை இயக்குகிறார். போஸ்டரில் மேகா ஆகாஷ் கையில் சிகரெட் இருப்பது போலவும், அதில் இருந்து சிதறிய சாம்பல் போல ஒரு நபர் விழுவது போஸ்டரில் காட்டப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது இருக்கிறது. தற்போது வைரல் ஆகும் போஸ்டர் இதோ..