10 நாட்களில் மெய்யழகன் திரைப்படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
மெய்யழகன்
சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை பிரபல இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். 96 படத்திற்கு இவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் இதுவே ஆகும். மேலும் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
சமீபத்தில் தான் மெய்யழகன் படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் முதல் நாளில் இருந்த வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் 10 நாட்களில் உலகளவில் ரூ. 48 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதன் காரணமாகவே நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. அதனால் தற்போது 14 நிமிடங்கள் படத்திலிருந்து நீக்கப்பட்டு, திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan