திரையரங்கில் பட்டையை கிளப்பும் மெய்யழகன்.. 11 நாட்கள் வசூல் விவரம்
மெய்யழகன்
பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்க கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் மெய்யழகன். அப்படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளிவந்துள்ளது.
96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். முதல் படம் இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து 6 வருடங்களுக்கு பின் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மெய்யழகன்.

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி என பலரும் நடித்திருந்தனர். 96 படத்திற்கு இசையமைத்து நம் மனதை கொள்ளைகொண்ட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
11 நாட்கள் வசூல்
இந்த நிலையில் மெய்யழகன் படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 46.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் மெய்யழகன் படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri