4 நாட்களில் மெய்யழகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மெய்யழகன்
கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், கடந்த வாரம் வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நெகட்டிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து முதல் முறையாக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

இவர்கள் இருவருடைய காம்போ பட்டையை கிளப்பியுள்ளது. மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.
வசூல்
இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 28.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan