மெய்யழகன் படம் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிரேம் குமார்
96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். முதல் படத்திலேயே தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துவிட்டார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பின் பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன்.
இப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்க, கார்த்தி, அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மெய்யழகன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ஆளுநர் ரவிக்கு மூக்குடைப்பு; ராஜ்பவனை விட்டு வெளியேறுக - அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு IBC Tamilnadu

மசோதாக்களுக்கு ஒப்புதல்; முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இனி.. ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம் IBC Tamilnadu

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
