மெர்சல் பட தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தில் இத்தனை நடிகர்களா! யார் யார் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மெர்சல்.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது, மெர்சல் படத்திற்கு பின் தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த ஒரு படத்தையும் தயாரிக்கவில்லை.
மேலும் மெர்சல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே அடுத்தடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் எந்தஒரு படத்தையும் தயாரிக்கவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் தங்களின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
மேலும் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஆம் இப்படத்தில் பிரபு தேவா, அட்டகத்தி தினேஷ், 'மண்டேலா' கண்ணா ரவி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
