மெர்சல் படத்தில் வெளியான நீக்கப்பட்ட காட்சி ! இதுவரை பலரும் பார்த்திராதது..
முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல்.
இப்படத்தில் விஜயுடன் இணைந்து சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்திருந்தனர்.
இப்படம் வசூல் ரீதியாக சுமார் ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
மேலும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக முதல் முறையாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியின் GIF புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் இன்றுடன் மெர்சல் திரைப்படம் வெளியாகி 4 வருடங்களாகியுள்ள நிலையில், தற்போது இந்த அன்ஸீன் காட்சியை இணையத்தில் பரப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
#Mersal Deleted Scene❤️#Beast #Master @actorvijay @Atlee_dir @Samanthaprabhu2 @Jagadishbliss #4YrsOfBlockbusterMersal pic.twitter.com/2Z8YIGjAP0
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) October 18, 2021