படு ஹிட்டடித்த மெட்டி ஒலி சீரியலின் 2ம் பாகம்..., வெளிவந்த சூப்பர் அப்டேட்
மெட்டி ஒலி
தமிழ் சின்னத்திரையில் 90 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான தொடர்கள் பல உள்ளன, அதில் ஒன்று தான் மெட்டி ஒலி.
கடந்த 2002ம் ஆண்டு சிறியவர்கள் முதல் பெரியவரைகள் வரை அனைவரும் பார்த்து ரசித்த ஒரு தொடர். அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இப்போதும் மக்களால் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.
5 சகோதரிகளில் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த தொடரை திருமுருகன் அவர்கள் இயக்கியிருந்தார். தொடர் முடிவடைந்து சன் தொலைக்காட்சியில் சில முறை மறுஒளிபரப்பும் செய்துள்ளார்கள்.
அடுத்த பாகம்
கடந்த சில வருடங்களாக இந்த ஹிட் சீரியலின் 2ம் பாகத்திற்கான பேச்சுகள் அடிபடுகிறது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த சகோதரிகள் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக சந்தித்துக்கொண்டு எடுத்த போட்டோஸ் எல்லாம் வைரலானது.
இப்போது என்ன தகவல் என்றால் மெட்டி ஒலி 2 சீரியலின் 2ம் பாகம் விரைவில் நடைபெற இருப்பதாகவும், ஆனால் தொடரை திருமுருகன் இயக்கவில்லை என்கின்றனர்.
பண விஷயத்தில் முத்து-மீனா எடுத்த அதிரடி முடிவு, செல்வம் செய்யப்போவது என்ன... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
மெட்டி ஒலி தொடரில் அவருடன் அசிஸ்டென்ட் இயக்குனராக பணிபுரிந்தவர் தான் 2ம் பாகத்தை எடுக்கிறார் என்கின்றனர். ஆனால் எந்த ஒரு தகவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.