மெட்டி ஒலி சீரியல் புகழ் தனமா இது, அப்படியே ஆளே மாறிவிட்டாரே?- ஷாக்கான ரசிகர்கள், போட்டோ இதோ
மெட்டி ஒலி
தமிழ் சின்னத்திரையில் இப்போது ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, ஆனால் 90களில் வந்த சீரியல்களை யாராலும் மறக்க முடியாது.
அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி படு ஹிட்டடித்த தொடர் தான் மெட்டி ஒலி. இந்த சீரியலில் ஐந்து பெண்களுக்கும், அப்பாவுக்கும் உள்ள கதையாக இந்த தொடர் ஒளிபரப்பானது.
இதில் குடும்பத்திற்கு முதல் பெண்ணாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் காவேரி. அதன்பிறகு வம்சம் என்ற தொடரில் கடைசியாக நடித்தார்.
லேட்டஸ்ட் போட்டோ
அந்த சீரியலுக்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு உடல் மெலிந்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கும் அவரது லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
சீரியல் முடித்த கையோடு எங்க அம்மா இறந்துட்டாங்க, அதேநேரம் தான் எனக்கு கல்யாணமும் ஆகி இருந்தது.
இதனால் நான் ரொம்பவே டிப்ரஷனில் இருந்தேன், வீட்டிலேயே முடங்கினேன் என தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.