மெட்டி ஒலி சீரியல் செல்வத்தை நியாபகம் இருக்கா?- இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
அதில் ஒன்று மெட்டி ஒலி, இந்த சீரியல் ஒளிபரப்பாகும் போது பார்க்காத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும். கொரோனா நோய் தொற்று பிரச்சனை ஆரம்பத்தில் இந்த மெட்டி ஒலி சீரியல் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
சீரியலில் நடித்த பலருக்கு சினிமாவில் பெரிய ரீச் கிடைக்க சிலர் வாய்ப்புகள் இல்லாமல் குடும்பத்தை கவனித்து வருகிறார்கள்.
இந்த மெட்டி ஒலி சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் விஷ்வா நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு தொழிலதிபரின் மகளை திருமணம் செய்துகொண்டு மீண்டும் நடிக்க வந்த அவர் சன் தொலைக்காட்சியிலேயே பொன்னூஞ்சல் சீரியலில் நடித்து வந்தார்.
இடையில் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துவந்த அவருக்கு சரியான பட வாய்ப்பே கிடைக்கவில்லையாம். இதனால் விஷ்வா மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவரே இதனை கூறியுள்ளார்.